மாத்தறையில் பாரவூர்தி மோதி பெண் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு.!
மாத்தறை – ஹக்மன பிரதான வீதியின் துடாவ பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த பெண் பாதசாரி மீது மாத்தறை நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெண் உடனடியாக மாத்தறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண்ணின் அடையாள விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.