பெண் ஒருவர் கழுத்தறுத்து படு கொ*லை.!
இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று (13) இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை தூல்கல பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக பெண் ஒருவர் கழுத்தில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் இரத்தத்தில் கிடப்பதாக அயகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை மீட்டு அயகம வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்தைமேற்கொண்டவர்கள் யார் அல்லது எதற்காக இந்தக் கொலை இடம்பெற்றது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.தலைமறைவாக உள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.