உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை ஒட்டுமொத்த மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பேராதனை போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

பாடசாலை பிள்ளைகள் மட்டுமன்றி ஒட்டு மொத்த மக்களும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படுவதனை வரையறுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொற்றா நோய்களான நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலை குளிர்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

எந்த வயதினைச் சேர்ந்தவர்களாயினும் தலைசுற்றல், தசை பிடிப்பு, வாந்தி, களைப்பு மற்றும் மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவ உதவிகளை நாட வேண்டுமென பேராசிரியா் டொக்டர் ரலபான தெரிவித்துள்ளார்.

அனைவரும் அதிகளவில் நீரை பருக வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் ஒட்டுமொத்த மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

3 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

59 0 0