உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

நாட்டில் கிராமப்புறங்களில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையால் பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.அவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிப்பதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உபாலி பன்னிலகே குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கிராமிய வறுமையை ஒழிப்பதற்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.அதற்கமைய, ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் வறுமைக்கான காரணங்களைக் கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் அனைத்துப் பிரதிநிதிகளும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகப் பொருளாதாரத்தில் ஒருவித தாக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த 15 மாத காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டதன் காரணமாக அந்தத் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளதாக அவர் கூறினார்.

அவ்வாறு பொருளாதாரத்தைப் பலப்படுத்தியிருக்காவிட்டால், மீண்டும் ஒரு வரிசை யுகம் உருவாகியிருக்கும் என்றும் அமைச்சர் உபாலி பன்னிலகே மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0