ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர் யாழிற்கு விஜயம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.இந்த விஜயத்தின் போது, யாழ்ப்பாண நகரிலுள்ள ஓர் விடுதியில் கட்சி உறுப்பினர்களுடன் கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் அவர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் அவர்கள் பங்கேற்றனர்.அதன் பின்னர், குழுவினர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துகளை வெளியிட்டனர்.