உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஈரானிய மாலுமிகளின் சடலங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

காலிக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லையில் அமெரிக்காவின் டொர்பிடோ தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கடிக்கப்பட்ட ‘ஐரிஸ் டெனா’ கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில் 45 பேரின் சடலங்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

காலி போதனா வைத்தியசாலையின் இரண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த 45 சடலங்களும் தற்போது மத்தள சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

உயிரிழந்த ஏனைய ஈரானிய மாலுமிகளின் சடலங்களும் அடுத்தடுத்த கட்டங்களாக அந்நாட்டுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

குறித்த சடலங்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதிவான் சமீர தொடன்கொட பிறப்பித்த உத்தரவுக்கமையவே, இவை இன்று வான்வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த 4 ஆம் திகதி காலித் துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட டொர்பிடோ தாக்குதலினால் ‘ஐரிஸ் டெனா’ கப்பல் கடலில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

54 0 0