உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பழிவாங்கும் நடவடிக்கையையே முன்னெடுக்கின்றது அநுர அரசு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை எவ்விதத் தலையீடுகளுமின்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“தற்போதைய அரசு அரச நிறுவனங்களுக்கு, தமக்குச் சாதகமானவர்களைத் தலைவர்களாக நியமித்து, அவர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றது. தேவையற்ற விதத்தில் அனைவர் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனநாயகக் கட்டமைப்புக்கு உட்பட்டு அனைத்துத் தலைவர்களும் செயற்பட்டமையாலேயே, 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய ஆட்சியாளர்களால் அதிகாரத்துக்கு வர முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.

கடந்த ஒன்றரை ஆண்டு காலப்பகுதியில் இந்த அரசின் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் எதனையும் காண முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தலைப்பைக் கொண்டு வந்து, நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமே அரசு திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட போதிலும், ஒரு வருடமாகியும் சுயாதீன பெண்கள் ஆணைக்குழுவை நியமிக்க இந்த அரசால் முடியவில்லை.

நீதிமன்றமும், இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் தற்போது பல முக்கிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. தற்போதைய அமைச்சரவையில் அங்கத்தவராக இருக்கும் குமார ஜயகொடிக்கு எதிராக 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊழல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கிடைக்கப்போகும் தீர்ப்பை நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நீதித்துறையின் மீதான கௌரவத்துடனும், அதன் சுதந்திரம் பேணப்படும் என்ற நம்பிக்கையுடனும் இந்த வழக்கு நடவடிக்கைகள் சரியாக முன்னெடுக்கப்பட்டுச் சரியான தீர்ப்பு வழங்கப்படும் என நாம் நம்புகின்றோம்.

இலங்கை வரலாற்றில் அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் நாட்டுக்காகப் பணியாற்றியுள்ளன. நாட்டில் ஜனநாயகம் நலிவடைந்து செல்லும் இந்த வேளையில், ஜனநாயகத்தைப் பாதுகாத்துச் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அனைவரும் முன்வர வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0