சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் தெய்வீக இசை அரங்கம்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் இடம்பெறும் நிகழ்ச்சி சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் தெய்வீக இன்னிசையை ஆதித்தியா அருணகிரிநாதன் வழங்கினார். கீபோட் இசையினை இசைக்கலைமணி நடேசு செல்வச்சந்திரன் அவர்களும், தபேலா இசையினை வயலின் வித்துவான் பா.கபிலன் அவர்களும், மிருதங்க இசையினை கலாவித்தகர் க.நந்தகுமார்
ஆகியோர் வழங்கினர்.
இந் நிகழ்வில் சந்நிதியான் அச்சிரம சைவ கலைப் பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் அச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
