விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்.!
நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (12) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 586 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 27,726 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 266 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 59 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 295 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 176 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,682 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.