வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அம்பகொடை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, நேற்று வியாழக்கிழமை (12) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 38,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.