உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை – சஞ்சீவ தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் நேரடி தொடர்பு கொண்டதாக கூறப்படும் சஹ்ரான் ஹாஷிம் தாக்குதலை நடத்த வேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி தேவையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஐந்து அமெரிக்கப் பிரஜைகள் உயிரிழந்ததால், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதலாளர்களின் மின்னணு சாதனங்கள் மற்றும்ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சத்திய அறிக்கையில், இந்தத் தாக்குதலின் பிரதான திட்டமிடுபவர் சஹ்ரான் ஹாஷிம் என்பதும், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அவர் வழிநடத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


மேலும், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர்களுடன் தொடர்பு பேணி அவர்களின் அனுமதியுடன் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சர்வதேச அளவில் வெளிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய நிலையில், தாக்குதலுக்குத் தயாரான குழுவிற்கு தேவாலயங்களை சுரேஷ் சலே காட்டினார் என கூறுவது நகைச்சுவையானதாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.சுரேஷ் சலே தற்போது எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு அரசியல் நியாயம் காண்பிக்கவே உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

44 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

45 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0