உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

காலாவதியான மருந்துகள் வைத்திருந்த கல்முனை தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

காலாவதியான மருந்துப் பொருட்களை பாவனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்முனை பகுதியில் இயங்கி வந்த தனியார் வைத்தியசாலைக்கு 100,000 ரூபாய் அபராதம் விதித்து கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் இயங்கி வரும் குறித்த தனியார் வைத்தியசாலையில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி தலைமையிலான புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, பாவனைக்காக வைத்திருந்த காலாவதியான மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து அந்த வைத்தியசாலைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று (12) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றத்தை ஏற்றுக்கொண்ட தனியார் வைத்தியசாலையின் முகாமையாளருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


மேலும், குறித்த வழக்கில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான புலனாய்வு அதிகாரி இஷட் எம். ஸாஜீத், சம்பவம் தொடர்பான விளக்கங்களை மன்றில் சமர்ப்பித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

44 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

45 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0