அடிப்படை மனித உரிமைகளை மீறிய அதிகாரிகள் சொந்தப் பணத்தில் நஷ்டஈடு செலுத்த உத்தரவு.!
மிதிகம பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரை தாக்கி துன்புறுத்திய சம்பவத்தில், மதுவரி திணைக்களத்தின் 7 அதிகாரிகள் அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.உயர் நீதிமன்றத்தின் உத்தரவப்படி, குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் தலா 75,000 ரூபாய், ஏழுவரும் இணைந்து மொத்தம் 525,000 ரூபாயை மனுதாரருக்கு நஷ்டஈட்டாக வழங்க வேண்டும். இந்த தொகையை தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 3 மாதங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும்.
சம்பவம் 2023 ஜனவரி 4ஆம் திகதியன்று நிகழ்ந்தது. மனுதாரர் தனது உணவகத்திற்கு வெளியே ஏற்படும் சலசலப்புகளை பதிவு செய்ய கண்காணிப்பு கருவிகளை பரிசோதித்ததாகவும், அதிகாரிகள் தமது ஊழியர்களை தாக்கிய காட்சியை கண்டதாகவும் தெரிவித்தார்.
பின்னர், அதிகாரிகள் தாங்கள் பொலிஸார் எனக் கூறி, தடிகளால் தாக்கியதும் பெட்சீட் மூலம் கண்களை கட்டித் தாக்கியதும், மதுபானப் போத்தல்கள் குறித்து கேள்வி எழுப்பியதும் மனுதாரர் குற்றஞ்சாட்டினார்.
மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, இந்த செயலின் மூலம் அதிகாரிகள் மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் என ஏகமனதாக தீர்ப்பளித்தது.மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி நிலுகா திஸாநாயக்க, பிரதிவாதிகள் தரப்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க முன்னிலையானனர்.