உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

யாழ். பழைய பூங்காவில் உள்ளக அரங்கு அமைக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை யாழ். மாவட்ட நீதிமன்றம் விலக்கிக் கொண்டமையை ஆட்சேபித்து வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மற்றும் மேன்முறையீட்டு மனு ஆகியவற்றைப் பரிசீலனைக்கு எடுத்த மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம், மீளாய்வு மனு மற்றும் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடையும் வரை இந்தக் கட்டுமானத்துக்கு எதிரான இடைக்காலத் தடையை நீடித்து இன்று உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

இரண்டு நீதிபதிகளைக் கொண்ட ஆயம் இன்று காலை இந்த உத்தரவை விடுத்திருக்கின்றது.

யாழ். பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கைப் பரிசீலித்த யாழ். மாவட்ட நீதிமன்றம், முதலில் அந்தக் கட்டுமானத்துக்கு எதிராக இரண்டு வார கால இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை வழங்கி இருந்தது. எனினும் பின்னர் அந்த இரண்டு வார காலம் முடிவடைந்ததும், புதிய சட்ட வாதங்கள் எதனையும் செவிமடுக்காமல், தன்பாட்டில் அந்த இடைக்காலத் தடை உத்தரவை நீடிக்காமல் விடுக்கும் கட்டளையை மாவட்ட நீதிமன்றம் வழங்கி இருந்தது.

அதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடும் மீளாய்வு முறையீடும் செய்யப்பட்டன. அந்த இரண்டு மனுக்களையும் மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதாடியிருந்தார்.

இந்த விவகாரத்தை ஒட்டி தன்னுடைய கட்டளையை மேன்முறையீட்டுக்கான மேல்நீதிமன்றம் இன்று வழங்கி இருக்கின்றது.

இந்த மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை மேற்படி கட்டுமானத்துக்கு எதிரான இடைக்காலத் தடை தொடர்ந்து நீடிக்கும் என்று மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் தன்னுடைய இன்றைய உத்தரவில் தெளிவாகக் கட்டளை பிறப்பித்திருக்கின்றது.

இந்த மீளாய்வு மனுத் தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு அளித்து எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் மேன்முறையீட்டு மனுவும் தொடர்ந்து விசாரணைக்கு முன்னெடுப்பதா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக மன்றில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் திணுக்கா சுந்தரராஜன், மகாதேவன் ரஜீவன், ரவிக்குமார் மயூரி, கணபதிப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி மன்றில் வாதாடியிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

44 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

45 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0