உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
48 பார்வைகள்

“சொந்தமாக இருக்க இடம். ஒரு அழகான வாழ்க்கை”என்னும் தொனிப்பொருளுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகெளரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 12.03.2026 இன்று காலை 9.30 மணிக்கு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமாகிய கந்தசாமி பிரபு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கணக்காளர் A.Z.ஹிசைன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச செயலக பிரிவில் இருந்து 24 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வீட்டு வேலைகளை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட கொடுப்பனவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரினாலும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தரினாலும் இவ் வீட்டுத்திட்டம் தொடர்பான தெளிவூட்டல் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0