உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

கொழும்புக்கும் மெல்பேர்னுக்கும் இடையிலான விமான சேவை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கொழும்புக்கும் மெல்பேர்னுக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதுஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்களின் பயணத் தேவைகள் அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அட்டவணை, எதிர்வரும் ஆகஸ்ட் 02 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.தற்போதுள்ள தினசரி விமான சேவைகளுக்கு மேலதிகமாக, வாரத்தில் மூன்று நாட்கள் புதிய விமானங்கள் இயக்கப்படவுள்ளன.கொழும்பிலிருந்து பிற்பகல் 14:10 மணிக்கு புறப்படும் விமானம், மறுநாள் அதிகாலை 04:30 மணிக்கு மெல்பேர்னைச் சென்றடையும்.

மெல்பேர்னில் இருந்து காலை 06:00 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 12:15 மணிக்கு கொழும்பை வந்தடையும்.அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்காக தாய்நாட்டுக்கு வந்து செல்ல கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள், விடுமுறை காலங்களில் நாட்டிற்கு வந்து செல்வதற்கு இந்த சேவை அதிகரிப்பு உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

60 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

35 0 0