உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எரிசக்தி அமைச்சருக்குக் கடிதம்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நாட்டின் மின்சாரக் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், கூட்டுத் தொழிற்சங்க முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான தமது நிலைப்பாட்டை விளக்கியும், இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எரிசக்தி அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் ஊடாக மின்சார சபையை மறுசீரமைக்கும்போது ஊழியர்கள் இதுவரை அனுபவித்து வந்த வரப்பிரசாதங்கள் எக்காரணம் கொண்டும் குறைக்கப்படக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஊழியர்களின் உரிமைகளைக் கடுமையாக மீறும் வகையில் அவர்களைப் புதிய நிறுவனங்களுடன் இணைக்கத் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், கடந்த திங்கட்கிழமை (09) பிற்பகல் 3.00 மணி முதல் 25 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்க நேரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 25 தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழியப்பட்ட ‘கூட்டு ஒப்பந்தத்தின்’ சரத்துக்கள் தொடர்பாக, புதிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் நேற்று (10) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்குச் சாதகமான நிலையில் நிறைவடைந்ததோடு, இணக்கப்பாட்டிற்கு வர முடியாத விடயங்கள் குறித்து எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடி இறுதி முடிவுகளை அறிவிக்க நான்கு நிறுவனங்களின் தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

60 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

35 0 0