உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தெற்கையும் வடக்கையும் இணைக்கும் “நல்லிணக்கத்தின் தரிப்பிடம் : சேவை மையம் வவுனியாவில் திறப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், சுற்றுலாப் பயணிகள் மற்றும் நீண்ட தூரப் பயணிகளுக்கான ஓய்வு வசதிகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட “தெற்கையும் வடக்கையும் இணைக்கும் நல்லிணக்கத்தின் தரிப்பிடம்” எனும் புதிய சேவை மையம் 2026 மார்ச் 10 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தின் இரட்டை பெரியகுளம் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.


கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.யாழ்ப்பாணம் – கண்டி A9 பிரதான வீதிக்கு முகப்பாக அமைந்துள்ள இந்த சேவை மையத்தில் 20 வர்த்தக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாணத்திற்கே உரித்தான கலாசார உற்பத்திப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


தூர இடங்களுக்கு பயணம் செய்யும் மக்கள் தமது களைப்பை நீக்கிக் கொள்ளும் வகையில் வசதியான சூழல், நவீன சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பான ஓய்வு இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இம்மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக 15 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனுடன், வடக்கு பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு பயணம் செய்யும் மக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நோக்கில் கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளமும் அமைச்சர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.இந்தத் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் வாழும் குறைந்த வருமானக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடக்கு மாகாண உற்பத்திகளுக்கு புதிய சந்தையை உருவாக்குவதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.இந்நிகழ்வில் வவுனியா மாவட்டசெயலாளர் பி.ஏ. சரத்சந்திர, வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் அசங்க காஞ்சன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் தவிசாளர் சுதர்ஷன வீரகோன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

60 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

35 0 0