உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பராமரிப்பு நிலையக் குளத்தில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள பிள்ளைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த ஒன்றரை வயதுக் குழந்தை, அங்கிருந்த சிறிய அலங்காரக் குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மெதமுலன, கதமடித்த பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தாய் வழமை போன்று குழந்தையைப் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுத் தனது வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் தாயைத் தொடர்புகொண்டு, குழந்தையை மித்தெனிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தாய் அங்கு சென்றபோதே, பராமரிப்பு நிலையத்தில் இருந்த சிறிய குளத்தில் விழுந்து குழந்தை உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

குழந்தையின் பாதுகாப்பில் அலட்சியமாகவும் பொறுப்பற்ற முறையிலும் செயற்பட்ட குற்றச்சாட்டில், பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் எம்பிலிப்பிட்டிய தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

60 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

35 0 0