உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மின்சார சபை மறுசீரமைப்பு: அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைப் பெற்ற தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையைச் சிதைக்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்கு முன்பு மின்சார சபையின் 23 ஆயிரம் தொழிலாளர்களை முன்னிறுத்தி, எந்த நிலையிலும் மின்சார சபையை தனியார்மயமாக்க விடமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணி உறுதியளித்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் அதிகாரத்தைப் பெற்ற பின்னர் அந்த வாக்குறுதியை மறந்து, மின்சார சபையை பல பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


மின்சக்தித் துறை நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய துறையாக இருப்பதால், அதனுடன் தொடர்புடைய எந்த மறுசீரமைப்பும் பொறுப்புடனும்வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அதிகாரத்தைப் பெற்ற ஆட்சியாளர்கள் தங்களை நம்பி வாக்களித்த 23 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


மின்சார சபையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் எவ்வித முரண்பாடும் இல்லையெனவும், ஆனால் அந்தச் சீர்திருத்தங்கள் நிறுவனத்தையே பாதிக்கும் வகையில் அமையக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதேவேளை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பிலும் அரசின் திட்டமிடல் குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டி, இப்போது முழு மின்சார சபையும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், இனிமேல்அரசின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் நாட்டின் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

22 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0