உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட அந்தக் கட்சியின் ஆறு உறுப்பினர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சாட்சியாளர்களின் சாட்சியங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது என கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.வழக்கில் பிரதிவாதிகளாக உள்ள விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.


இவ்வழக்கின் மற்றொரு சந்தேகநபரான ரொஜர் செனவிரத்ன சுகவீனம் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதி மறிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

22 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0