உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

போர்ச்சூழலால் உச்சத்திலிருந்த தங்கம்; இலங்கையில் இன்று அதிரடி வீழ்ச்சி!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நாட்டில் கடந்த வாரத்தின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (9) தங்க விற்பனை நிலவரப்படி,22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 377,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அமெரிக்கா – இஸ்ரேல், ஈரான் மீது மேற்கொண்டுள்ள போர் காரணமாக கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதி உச்சத்தை எட்டியிருந்தது.கடந்த வார ஆரம்பத்தில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 388,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 408,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.இது கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் பவுன் ஒன்று 420,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.எவ்வாறாயினும் கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சுமார் 2000 ரூபாவால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதேவேளை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்றைய தினம் 5090 அமெரிக்க டொலர் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

22 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0