உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
79 பார்வைகள்

சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்களை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறை இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லனோய மற்றும் கெத்சிறிகம கிராமங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனைகளின் போது 41,500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பகுதிகளில் ஒரு குழு சிறிது காலமாக சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்து வருவதாகவும் இது இந்த கிராமங்களில் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கிராமங்களில் உள்ள இளைஞர்களும் இந்த சட்டவிரோத மதுபானத்தை உட்கொள்ள தூண்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் இந்த சோதனைகளை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் சட்டவிரோத மதுபானமும் சட்ட நடவடிக்கைகளுக்காக இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின் பேரில், அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமாராச்சி மற்றும் அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சந்திரசேகர சமரசிங்க, அம்பாறை பிரிவு ஊழல் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0