உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மின்கம்பத்தில் உந்துருளி மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
60 பார்வைகள்

அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே உந்துருளி வீதியை விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோதியதில் உந்துருளி செலுத்தியவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து இன்று(25 ) அதிகாலை 1:15 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்தில் காயமடைந்தவர் மற்றுமொரு வாகனத்தில் அம்பாறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் என்பதுடன்
இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திரவியல் பட்டாலியனைச் சேர்ந்த 22 வயதுடைய ஆர்.எச். உதிக மலிந்த ரணசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் பொலன்னறுவைக்குச் சென்று பின்னர் மஹியங்கனையில் உள்ள தனது பாட்டியைப் பார்த்துவிட்டு அம்பாறை பொல்வத்தைக்குத் செல்லும் வழியில் விபத்திற்குள்ளாகியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் உஹன பிரிவுக்குப் பொறுப்பானவிற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.எம். திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் உஹன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன உள்ளிட்ட போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0