உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

களுத்துறை கொ*லைச் சந்தேகநபர்; மக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

களுத்துறை வடக்கு, வாடியமங்கடை சந்திப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேகநபரைக் கைது செய்யப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

கடந்த 2026 பெப்ரவரி 14 ஆம் திகதி, உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இந்த மரணம் நிகழ்ந்திருந்தது. இச்சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

விசாரணைகளின் அடிப்படையில், இந்தக் கொலைச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் காணப்படும் நபர் குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தால், உடனடியாகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:
களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071 – 8591692
களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம்: 071 – 8596395

தகவல் வழங்குவோரின் அடையாளம் மற்றும் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனப் பொலிஸார் மேலும் உறுதி அளித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

15 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0