உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இங்கிலாந்தில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி!

உலக செய்திகள் 42 நிமிடங்கள் முன்
38 பார்வைகள்


இங்கிலாந்தின் கிளீவ்லாந்த் பொலிஸ் தலைமையகத்தில் கடமையின்போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளான மெத்தியூ பிளேட்ஸ் (Matthew Blades) மற்றும் டொம் கிளஃப் (Tom Clough) ஆகியோருக்கு சக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கிளீவ்லாந்த் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே, உயிரிழந்த இரு அதிகாரிகளையும் நினைவுகூரும் வகையில் மலர் அஞ்சலிகளும் இரங்கல் செய்திகளும் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் பலகையொன்றில், “நான் உங்கள் இருவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். நீங்கள் இருவரும் என்றும் எங்களால் நினைவுகூரப்படுவீர்கள்” என உருக்கமான செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மலர் அஞ்சலியுடன் வைக்கப்பட்டிருந்த இரங்கல் செய்தியில், அதிகாரிகளின் இழப்பால் ஏற்பட்டுள்ள துயரத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சக பணியாளர்களை இழந்த துயரத்தில் கிளீவ்லாந்த் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் உள்ளனர். பல ஆண்டுகளாக தங்களுடன் இணைந்து பணியாற்றிய சக அதிகாரிகளின் மறைவு, பொலிஸ் சமூகத்திலும் அவர்களது குடும்பத்தினரிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையை நினைவுகூரும் வகையில், தொடர்ந்து மலர் அஞ்சலிகள் மற்றும் இரங்கல் செய்திகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் வகையில் சக அதிகாரிகள் ஒன்றிணைந்துள்ளனர். இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்த இரு அதிகாரிகளின் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு சமூக ஊடகங்களிலும் பொதுமக்களிடமிருந்தும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

“எங்கள் நினைவுகளில் நீங்கள் என்றும் வாழ்வீர்கள்” என்ற உணர்வுடன், இரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது.

இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோ அருகே A66 வீதியில் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்!

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்க வெளியுறவுத் துறை நீக்கியுள்ளது. பஷார் அல்-அசாத்துக்கு பிந்தைய அரசாங்கத்திற்குத் தடைகளிலிருந்து நிவாரணம் அளிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அளித்த…

57 0 0
உலக செய்திகள்

ஈரான் உட்பட அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது – ட்ரம்ப்

ஈரான் உட்பட தனக்கு எதிரான அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா தீர்க்கமான வெற்றியைப் பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தள…

59 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் 45 கப்பல்களுக்கு ஈரான் தடை!

ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான புதிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 45 எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதுடன், அவற்றின் மீது…

24 0 0
உலக செய்திகள்

அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முடக்கிவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ள விரிவுபடுத்தப்பட்ட தடைகளுக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதாக தெஹ்ரான் உறுதியளித்துள்ளது. அதேவேளையில், வொஷிங்டனின் அழுத்த நடவடிக்கைகளைத் தங்கள் முக்கிய…

55 0 0