செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!
தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில் உள்ள வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கௌரவ நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கீளின் ஸ்ரீலங்க மாவட்ட இணைப்பாளர் மருங்கன் பிரதேச செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.