தமிழக முதல்வர் விஜயின் ‘வெற்றிப் பயணம்’திட்டம் காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பம்
தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லாப் பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் விதி எண் 110இன் கீழ் வெளியிட்டுள்ளார்.
முதற்கட்டமாக மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS மற்றும் டியுலக்ஸ் (Deluxe) அரசப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வதை ஏதுவாகக் கொண்டு, புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில் இயங்கும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாகப் பயணிக்க அனுமதி அளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற எவ்வித வருமான உச்சவரம்போ அல்லது மேற்கொள்ளவிருக்கும் பயண எண்ணிக்கையிலோ எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
மகளிர் மட்டுமின்றி, திருநங்கைகளும் (Transgender) இந்த திட்டத்தின் மூலம் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணிக்கலாம்.