இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
2009 ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகைகுளம் பகுதியில் நடைபெற்றது.
பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு நேரடியாகவே அமைச்சர் சென்று அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தற்போதைய நிலை தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன் உதவிகளை வழங்கியிருந்தார்.
தற்போதைய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மிகவும் கரிசனையாக செயல்பட்டு வருவதாகவும், அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவுவதற்கு தயாராக தாமும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்சன நாணயக்கார அவர்களினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இவ்வாறு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணிய முரளிதரன், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் கிளிநொச்சி அபிவிருத்தி குழு இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
