உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தமிழக வெற்றிக்கழக அமைச்சர் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு!

இந்திய செய்திகள் 48 நிமிடங்கள் முன்
62 பார்வைகள்

ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதல் பெரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆளும் தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமைச்சர் ஒருவர், ஒப்பந்தப் பணிகளில் பெற்ற கையூட்டல் பணத்தைக் கொண்டு சுமார் 100 ஏக்கர் விளைநிலங்களை கைப்பற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலியான பெயரிலான நிறுவனங்கள் மூலம் தலைநகரையும் தொழில் மண்டலங்களையும் இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக அறக்கட்டளைகள் பெயரில் நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களின் பின்னணியில் அமைச்சரின் நெருங்கிய உறவினர்களும் ஆதரவாளர்களும் இருப்பது எதிர்க்கட்சிகள் கசியவிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அரசு வழிகாட்டி மதிப்பை செயற்கையாகக் குறைத்துக் காட்டி பல கோடி ரூபாய் முத்திரைத்தாள் கட்டண ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளின் அழுத்தத்தால் சார்-பதிவாளர் அலுவலகங்களில் மின்னல் வேகத்தில் பத்திரப் பதிவுகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இது ஊழல் தொடர்பாக கையூட்டல் ஒழிப்புத்துறை அல்லது மேல்நீதிமன்ற மேற்பார்வையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

எனினும், இந்த குற்றச்சாட்டு, தமது அரசாங்கத்தின் செல்வாக்கைச் சீர்குலைப்பதற்காகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது என ஆளும் தரப்பு மறுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவும், சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது விசாரணை நடத்தப்படுமா என்பதும் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜயின் ‘வெற்றிப் பயணம்’திட்டம் காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பம்

தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லாப் பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

64 0 0
இந்திய செய்திகள்

நடிகர் விக்ரமால் பண்ணைக்கு வந்த சோதனை : அரியவகை விலங்குகள் பறிமுதல்!

நடிகர் விக்ரம் லார்க் கிப்பான் குரங்குடன் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள…

77 0 0
இந்திய செய்திகள்

நிழற்படக் கலைஞர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்து எடுத்த காணொளி வைரல்

உலக நிழற்பட தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் பத்திரிகை நிழற்படக் கலைஞர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து,…

152 0 0
இந்திய செய்திகள்

போலிப் பிரசாதத்தை விற்பனை செய்த Amazon நிறுவனத்துக்கு அபராதம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் எனப் பொய்யாகக் கூறி இணையவழியில் இனிப்புகளை விற்பனை செய்தமைக்காக, பிரபல அமேசன் (Amazon) நிறுவனத்துக்கு…

113 0 0