நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!
இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா பகுதிகளில் மாலை வேளையில் மிதமான மழை பெய்து வருகிறது. அத்துடன் பல பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மிதமான மழை பெய்து வருவதால் காபட் இடப்பட்ட சாலைகள் வழுக்கும் தன்மை கொண்ட நிலையில் உள்ளதால் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் அதிக பனிமூட்டம் காரணமாக வாகனங்களில் மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை ஓட்டி செல்லுமாறு ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.