‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!
அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி வரும் எங்களுடைய தாய்மார்கள் முன்னெடுக்கும் குறித்த செயல்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளரும், மனித உரிமைகள் ஆர்வலருமான யே.யாட்சன் பிகிறாடோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் இன்று (25) செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30 யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” என்ற நிகழ்வை, எங்களுடைய காணாமலாக்கப்பட்ட நீண்ட காலமாக போராடி வரும் எங்களுடைய தாய்மார்கள் இந்த செயற்பாட்டினை யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா மண்டபத்தில் அவர்கள் முன்னெடுக்கிறார்கள். அவர்களுக்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் ஆதரவுகள் வலித்துக் கொண்டு வருகின்றன.
சிவில் சமூகமாக இருக்கலாம், சமூக ஆர்வலர்களாக இருக்கலாம் மற்றும் சர்வதேச அமைப்புகளாக இருக்கலாம், இன்னும் பல்வேறு அமைப்புகள் அவர்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில், சிவில் சமூகமாக நாங்களும் அவர்களுக்கான ஆதரவினை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்.
அவர்களுடைய இந்த செயற்பாட்டை, அவர்களுடைய கருத்தை வலுப்படுத்தும் நோக்கோடு, அவர்களுக்கு ஆதரவை தொடர்ந்து அனைவரும் வழங்க வேண்டும் என்பதை நாங்களும் வலியுறுத்துகின்றோம்.
ஏனென்றால், இது ஒரு நீதிக்கான பயணம். இன்று வரைக்கும் தங்களுடைய பிள்ளைகளைத் தேடிய தாய்மாரும், பிள்ளைகள் தங்களுடைய தாய்மார்களைத் தேடியதாகவும், உறவுகள் சகோதரர்களைத் தேடியதாகவும் இந்த நிகழ்வு எங்களுடைய நாட்டில் வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவுற்று இன்று வரை நீதி கிடைக்காத ஒரு பயணமாக அவர்கள் இன்று வரைக்கும் வீதி வீதியாக முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய பயணம் நீதி கிடைக்கப்பட வேண்டும், உண்மை நிலை நாட்டப்பட வேண்டும். சர்வதேச ரீதியான தலையீடுகளுடன் அவர்களுடைய நீதியை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக, அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் இந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த தினத்திற்கு எங்களுடைய ஆதரவை நாங்கள் பலமாகத் தெரியப்படுத்துகிறோம்.
ஏனென்றால், நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த நீதி பயணத்தை முன்னெடுப்பதற்கு இணைந்து கொள்வது ஒவ்வொருவருடைய மனிதப் பொறுப்பாகும்.
நாங்கள் மனித உரிமைகளை மதித்தவர்களாக, சிவில் சமூகங்களாக, மனித உரிமை ஆர்வலர்களாக மற்றும் சமூகத்தைச் சேர்ந்த உங்களுடைய பணிகளை முன்னெடுக்கின்ற பல்வேறு நபர்களும் அவர்களுக்கு இந்த ஆதரவு வழங்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வினயமாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.