உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இளம் பெண்களின் அலைபேசிகளை ஊடுருவி நிர்வாண காணொளி கோரிய இளைஞன் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இளம் பெண்களின் அலைபேசிகளைச் சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி நிர்வாண காணொளிகளைக் கோரி வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது பொலிஸ் உதவிப் பரிசோதகர் நீதிமன்றத்தில் முன்வைத்த தகவல்கள் வருமாறு,
சந்தேகநபர் கடந்த மூன்று வருடங்களாகப் போலி இணைய இணைப்புகளைப் பயன்படுத்தி இளம் பெண்களின் அலைபேசிகளுக்குள் ஊடுருவியுள்ளார். அங்கிருந்து பெண்களின் அந்தரங்கத் தரவுகளைத் தரவிறக்கம் செய்ததோடு, வட்ஸ்அப் ஊடாகத் தொடர்புகொண்டு மேலதிக நிர்வாண காணொளிகளைக் கோரி மிரட்டியுள்ளார். தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால், தன்னிடம் உள்ள காணொளிகளை இணையத்தில் கசியவிடுவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு களுத்துறை மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

சந்தேகநபர் தனது அடையாளத்தை மறைக்க ‘கண்டறிய முடியாத’ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய போதிலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ‘பேஸ்புக்’ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரின் மனநிலை குறித்து முழுமையான மருத்துவ அறிக்கையைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் இளம் பெண்கள் மத்தியில் மிகுந்த எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

3 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0