உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டத்தரணி தம்பதி கொ*லை; கைதான முன்னாள் கடற்படை சிப்பாய் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

கொழும்பு, தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் அவருடன் இருந்த இருவர் மொனராகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி முன்னாள் கடற்படை சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் தென் மாகாணத்தில் மட்டும் பல துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை நடத்தி, இதுவரை 11 பேரைக் கொலை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இத்தனை கொலைகளைச் செய்த போதிலும், இதுவரை எந்தவொரு சம்பவத்திற்காகவும் இவர் பொலிஸாரினால் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் மூவருக்கு எதிராக 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, தற்போது இரண்டாவது துப்பாக்கிதாரியும் சிக்கியுள்ளார்.

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொலைக்கான உண்மையான பின்னணி மற்றும் இந்தப் பாதாள உலகக் கும்பலின் ஏனைய தொடர்புகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

15 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0