உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பொலிஸ் பொதுமக்கள் ஆலோசனைக் குழு – அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இடையே சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவிற்கு கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனைக் குழு உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றதுடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறு கலந்துரையாடல் ஒன்றினை பொலிஸ் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் மேற்கொண்டார்.

இதன் போது அங்கு கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்,
எமது இலங்கை பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலுக்கமைய ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தில் உள்ள சமூக பொலிஸ் பிரிவுடன் ஆலோசனைக் குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர கல்முனை பிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை, வீடு உடைப்பு, உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் உரிய தகவல்கள் மக்கள் ஊடாக சரியாக கிடைக்கப்பெற்றால் அவ்வாறான பிரச்சினைகள் உடனடியாக எம்மால் தீர்க்க முடியும்.

பொலிஸ் ஆலோசனைக் குழுக்கள் ஊடாக பல்வேறு செயற்திட்டங்களை இலங்கை பொலிஸ் முன்னெடுத்துள்ளது. அத்துடன் கல்முனை சமூக பொலிஸ் பிரிவுடன் இணைந்து ஆலோசனைக் குழு சரியான வினைத்திறனுடன் இயங்குவதை தற்போது என்னால் காண முடிகின்றது.எனவே பல்வேறு செயற்திட்டங்களை இக்குழுவின் ஊடாக முன்னெடுக்க முடியும் என நம்புகின்றேன். என்றார்.

மேற்குறித்த நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி உட்பட சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ.வாஹிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கு கருத்து தெரிவித்த கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரிவுக்குள் காணப்படும் குற்றச் செயல்களைக் குறைத்து பொலிஸாரின் கடமைகளை இலகுபடுத்தும் பொருட்டும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவும் தேவையான ஆலோசனைகளை எமது ஆலோசனைக்குழு வழங்குகின்றது.

இங்கு கல்முனை பொலிஸ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் உட்பட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி உட்பட சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் தத்தமது ஒத்துழைப்புக்களை எமது ஆலோசனை குழுக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

போக்குவரத்துச் சட்டம் மற்றும் சுற்றாடல் மாசுபடுவதை தடுத்தல் தொடர்பில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டிய அக்குழுவினர் வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றுவது தொடர்பிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பிலும் பொலிஸாரினால் கையாளக்கூடிய ஏனைய பல்வேறு விடயங்களை செயற்படுத்த ஆலோசனைகளை வழங்குவது தொடர்பிலும் தெளிவுபடுத்தினர்.

விசேடமாக சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு ஏனைய பொலிஸ் நிலையங்களின் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம்கண்டு தண்டனை வழங்கல், விஷேட போக்குவரத்து வழிமுறைகளை கையாளுதல், இரவு நேரங்களில் தேவையற்ற முறையில் வீதிகளில் கூடியிருப்பவர்கள் மற்றும் உலாவித் திரிபவர்கள் தொடர்பில் விஷேட கண்காணிப்பை செலுத்துதல், சிரமதான நிகழ்வுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்டன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சுற்றுநிருபத்தின் பிரகாரம் குற்றச்செயல்களை தடுப்பது, போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்தல், சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்தல் போன்ற செயற்பாடுகளை நோக்காகக் கொண்டு, நாடு பூராகவும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தையும் மையப்படுத்தி பொலிஸ் சமூக சேவை ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0