உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கொ*லையில் முடிந்த காணித் தகராறு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

நீண்டகாலமாகக் காணப்பட்டு வந்த காணித் தகராறு முற்றியதில், தம்பி நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் அண்ணன் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் கொழும்பு, ஹோமாகமை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஹோமாகமை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபருக்கும் அவரது 28 வயதுடைய தம்பிக்கும் இடையில் காணி விவகாரம் தொடர்பாக நீண்டகாலமாகப் பகை இருந்து வந்துள்ளது. நேற்று இரவு இருவருக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த தம்பி, மறைத்து வைத்திருந்த வாளால் அண்ணனைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த அண்ணன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய தம்பியைக் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

காணிப் பிரச்சினையே இந்தச் சகோதரப் படுகொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த…

33 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவகமுவ பொலிஸாருக்கு கிடைத்த…

70 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதக் கடவையில் இடம்பெற்ற கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

71 0 0
இலங்கை செய்திகள்

ஆபத்தான நிலையில் காணப்படும் பாலம்; மக்கள் விடுத்துள்ள கோரிக்கை.!

தலவாக்கலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள ஊட்டுவள்ளி தோட்டத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயிலில் உள்ள பிரதான பாலம் சுமார் 150 வருடங்கள்…

51 0 0