உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவருக்கு தடுப்புக்காவல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் இருவர் வாகனமொன்றில் நடமாடுவதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கல்முனை வைத்தியசாலை ஒன்றின் அருகில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது 61 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், கைத்தொலைபேசிகள், நிறுத்தல் தராசு, ஏ.ரி.எம். வங்கி அட்டைகள், வாகனம் ஒன்று என்பன சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டதுடன் குறித்த சந்தேக நபர்கள் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பகுதிக்கும் சந்தேக நபர்கள் அழைத்து செல்லப்பட்டு அவர்களது வீடுகளும் சோதனை செய்யப்பட்டன.

அத்துடன் கைதான 28 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் இருவரையும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்தலில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் – 1 சம்பத் விக்ரமரத்ன பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எ.எச்.ஏ.எல் சத்திரசிங்க தலைமையிலான பொலிஸ் பரிசோதகர்களான ஆர்.ஏ.டி.எச்.ரத்னாயக்க மற்றும் பண்டார உள்ளிட்டோருடன் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் மக்பூல், பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க, அஜீத், பொலிஸ் சாரதி சஜேந்திர ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0