உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அம்பாறையில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள் மும்முரம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை (04) புதன்கிழமை நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தினத்தில் அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களில் கொடிகள் ஏற்றப்பட்டு கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் மருதமுனை, பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, சவளக்கடை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பளம், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தேசிய கொடி விற்பனை இடம்பெற்று வருவதுடன் ஆர்வத்துடன் பொதுமக்கள் அக்கொடியினை கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேலும் பொலிஸ் நிலையங்கள், வங்கிகள், பிரதேச செயலகங்கள், பொது இடங்களில் தேசிய சுதந்திர தின வைபவங்களுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

சில இடங்களில் வாகன ஊர்வலங்களும் இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதே வேளை மருதமுனை ஏரிபொருள் நிரப்பு நிலையமான அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் அனுசரணையில் எரிபொருள் நிரப்பு நிலைய முன்றலில் நிலையத்தின் பணிப்பாளர் ஏ.ஏ.ஏ.ஹபீல் தலைமையில் சுதந்திர தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் தலைமையில் சுதந்திர தினத்தில் பொலிஸ் நிலைய முன்றலில் 200 பேருக்கு தன்சல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையில் அக்கரைப்பற்று பகுதியில் சுதந்திர தினத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0