உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்த்தும் அநுர அரசு – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
68 பார்வைகள்

நாட்டின் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதிக்கும் வகையில் இரண்டு புதிய கொடூர அடக்குமுறைச் சட்ட மூலங்களைக் கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

“ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாகவும், அடக்குமுறைச் சட்டங்களை முழுமையாக நீக்குவதாகவும் அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால், இன்று அதற்கு நேர்மாறாக ‘அரசைப்  பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கும் சட்டமூலம்’ போன்ற ஆபத்தான சட்ட மூலங்களை அவசரமாகக் கொண்டுவந்துள்ளது.

சமீபகாலமாக பொலிஸ் காவலில் இருந்தவர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதுடன், கடவத்தை பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இவ்வாறான சூழலில் இந்தப் புதிய சட்டங்கள் நாட்டின் ஜனநாயகத்தை முற்றாக அழித்து, ஒருதலைப்பட்சமான சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைந்துள்ளது. அரசுக்கு எதிராகப் போராட்டங்களிலோ அல்லது ஊர்வலங்களிலோ ஈடுபடுபவர்களை அல்லது எதிர்க்கட்சியினரை இந்தப் புதிய சட்டங்களின் கீழ் கைது செய்ய முடியும்.

அத்துடன், பொலிஸ் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதுடன், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரை ஈடுபடுத்தி நேரடி இராணுவ ஆட்சிக்கும் சர்வாதிகாரத்துக்குமே அரசு வழிவகுக்கின்றது.

ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த அரசு, இதுவரை எந்தவொரு ஊழல் வழக்கையும் நீதிமன்றில் தாக்கல் செய்யவில்லை. நிலக்கரி கொள்வனவு மோசடியில் 8 பில்லியன் ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளமை அறிக்கைகள் மூலம் தெளிவானபோதிலும், அது தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தங்கள் விருப்பத்துக்கு ஏற்பத் திருத்துமாறு அரசு கோருகின்றது. அதேநேரம், உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகங்களுக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் இந்த அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரப் பயணத்துக்கு  எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தைரியமிருந்தால் உடனே தேர்தலை நடத்திக் காட்டுக! : அநுர அரசுக்கு மொட்டுக் கட்சி சவால்

அரசும் ஜனாதிபதியும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அவர்களைத் தொடர்ந்தும் கற்பனை உலகில் வாழ வைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார…

72 0 0
இலங்கை செய்திகள்

சம்பளக் குறைப்புக்கு எதிர்ப்பு- அம்பாறை பொது மருத்துவமனைக்கு முன்பாக மருத்துவர்கள் தீவிர போராட்டம்!

அரச மருத்துவர்களின் சம்பளக் குறைப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்குக் கிளையினால் அம்பாறை…

35 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் ஆணை வழங்கியது அபிவிருத்திக்கே தவிர அடக்குமுறைக்கு அல்ல! : நாடாளுமன்றத்தில் சஜித் ஆவேசம்

அரசுக்கு மக்கள் ஆணை வழங்கியது நாட்டின் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தவே அன்றி அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அல்ல என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார். ஜனநாயக உரிமையை விரிவுபடுத்த…

94 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிப் பயணிக்கிறது.!

அரசாங்கமானது நாட்டின் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் இரு புதிய அடக்குமுறைச் சட்டமூலங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள்…

80 0 0