உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சம்பளக் குறைப்புக்கு எதிர்ப்பு- அம்பாறை பொது மருத்துவமனைக்கு முன்பாக மருத்துவர்கள் தீவிர போராட்டம்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
36 பார்வைகள்


அரச மருத்துவர்களின் சம்பளக் குறைப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்குக் கிளையினால் அம்பாறை பொது மருத்துவமனைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அரச மருத்துவர்களுக்கு அண்மைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பளக் குறைப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும், மருத்துவர்கள் சந்தித்து வரும் ஏனைய தொழில்சார் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்பட்டது.

அம்பாறை பொது மருத்துவமனைக்கு முன்பாக நடைபெற்ற இப் போராட்டத்தில் அம்பாறை மாவட்டப் பொது மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமன்றி, தெஹியத்தகண்டிய, மஹாஓயா , பதியத்தலாவை உள்ளிட்ட அருகிலுள்ள பல பிரதேச மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களும் திரளாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளியிட்டனர்.

சம்பளக் குறைப்பு மற்றும் சலுகைகள் பறிக்கப்பட்டமையினால் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருவதாகவும், இதற்குக் காத்திரமான தீர்வு கிடைக்கப்பெறாவிடின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த நேரிடும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இதன்போது எச்சரித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள சொறிக்கல்முனை – வீரமுனை பிரதான வீதி.!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் சொறிக்கல்முனை – வீரமுனை எல்லைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள ஆபத்தான வளைவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்…

82 0 0
அம்பாறை செய்திகள்

பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு இளைஞர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம்…

86 0 0
அம்பாறை செய்திகள்

சாய்ந்தமருதில் ஒலிபெருக்கிகளால் தொல்லை; கட்டுப்பாடு விதிக்க மக்கள் கோரிக்கை.!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண் சந்தைப் பகுதியில் ஒலிபெருக்கி சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

92 0 0
அம்பாறை செய்திகள்

ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ கவிதை நாடகம் அரங்கேற்றம்.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் TK/THIRUKKOVIL MMTMV பாடசாலையின் ஆங்கிலப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆங்கில இலக்கியப் படைப்பான வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ (OTHELLO) கவிதை…

125 0 0