உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் தில்லுமுல்லு.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
31 பார்வைகள்

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் இருந்து பிரதேச சபையின் உறுப்பினர் தயாபரன் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினரான தயாபரன் தனது வட்டாரம் தவிர்ந்து வேறொரு வட்டாரத்துக்கு சென்று, நவாலி சோமசுந்தரம் வீதியில் உள்ள கமநல சேவை திணைக்களத்திற்கு சொந்தமான வாய்க்காலில் இருந்து 25 லோட் மண் ஏற்றிச் சென்றுள்ளார்.

இதற்காக பிரதேச சபையின் ஜேசிபி இயந்திரமானது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேறொரு திணைக்களத்திற்கு வேலை செய்வதாக இருந்தால் பிரதேச சபையின் நிர்வாக பிரிவில் அனுமதி பெற்றே அந்த வாகனம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது நியதி.

அத்துடன் அந்த மண்ணை ஏற்றிச் செல்வதற்கு எந்தவிதமான அனுமதியும் பெறப்படாமல் மண் ஏற்றிச் செல்லப்பட்டதாக நவாலி பகுதி பிரதேச சபையின் உறுப்பினர் நா.பகீரதன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயமானது கடந்த பிரதேச சபை அமர்வில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அங்கு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன. அதன்பின்னர் உறுப்பினர் தயாபரன் ஏற்றிச் சென்ற மண்ணை மீண்டும் ஏற்றிய இடத்திற்கே கொண்டு சென்று போட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பெண்ணொருவர் உ**யிரிழப்பு.!

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34)…

29 0 0
இலங்கை செய்திகள்

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ரிசாத் பதியுதீன்.!

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் இல்லத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

24 0 0
இலங்கை செய்திகள்

யாழில் கடலாமைகளுடன் ஒருவர் கைது.!

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றையதினம் சனிக்கிழமை இரண்டு கடலாமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேந்தான்குளம் பகுதியில் கடலாமைகளுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

32 0 0
இலங்கை செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது.!

டெலிகிராம் செயலி மூலம் இணையவழி வணிகத்தில் பெருந்தொகை பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பட்டுவத்தை பகுதியைச்…

11 0 0