உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

கோர விபத்தில் பெண்ணொருவர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
31 பார்வைகள்

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தொழில் நிமித்தம் இன்று காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, உந்துருளியுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் 42 வயதான வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ரிசாத் பதியுதீன்.!

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் இல்லத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

26 0 0
இலங்கை செய்திகள்

யாழில் கடலாமைகளுடன் ஒருவர் கைது.!

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றையதினம் சனிக்கிழமை இரண்டு கடலாமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேந்தான்குளம் பகுதியில் கடலாமைகளுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

33 0 0
இலங்கை செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் தில்லுமுல்லு.!

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் இருந்து பிரதேச சபையின் உறுப்பினர் தயாபரன் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது…

31 0 0
இலங்கை செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது.!

டெலிகிராம் செயலி மூலம் இணையவழி வணிகத்தில் பெருந்தொகை பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பட்டுவத்தை பகுதியைச்…

12 0 0