உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்; ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை.!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
15 பார்வைகள்

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசர சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.

இந்தச் சட்டமானது ரஷ்யாவின் வலுசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளை இலக்கு வைப்பதுடன், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மூத்த அதிகாரிகளையும் குறிவைக்கிறது.

மேற்கத்திய நாடுகளின் தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் ‘நிழற்படைக் கப்பல்களை’ (shadow fleet) இலக்கு வைக்கும் இச்சட்டம், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் வாங்கும் நாடுகளுக்கு 100% வரை தீர்வை வரிகளை (Tariffs) விதிக்கும் அதிகாரத்தை ட்ரம்பிற்கு வழங்குகிறது.

இது ரஷ்யாவின் போர் வருவாயைத் துண்டிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துவதோடு, சீனா மற்றும் இந்தியாவையும் பாதிக்கக்கூடும்.

குடியரசுத் கட்சி ஆதிக்கம் செலுத்தும் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை இச்சட்டமூலத்தை 262-159 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியது.

ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நபர்களை இலக்கு வைப்பதுடன், ஈரானுடன் தொடர்புடைய பொருளாதாரத் தடைகளையும் இச்சட்டம் விரிவுபடுத்துகிறது.

இருப்பினும், வரிகளை விதிக்கும் வரம்பற்ற அதிகாரம் ட்ரம்பிற்கு வழங்கப்படுவதை எதிர்த்து சில ஜனநாயகக் கட்சியினர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் உக்ரைனை ஆதரித்தாலும், வர்த்தக ரீதியான முழு அதிகாரத்தையும் ட்ரம்பிற்கு வழங்குவதை எதிர்க்கின்றனர்.

அமெரிக்க காங்கிரஸின் இந்நடவடிக்கை ஒரு நல்ல குறியீடு எனக் குறிப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, அமெரிக்க சட்டமியற்றுபவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

46 0 0
உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

35 0 0
உலக செய்திகள்

சுவீடன் பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சிக் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி

சுவீடன் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சித் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, தான் பதவியிலிருந்து விலகப் போவதாக நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன்…

26 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

ஹோர்முஸ் (Hormuz) நீரிணை வழியாக “சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற” டோகோ (Togo) நாட்டுக்கொடியை ஏந்திய எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய இஸ்லாமியப்…

37 0 0