உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
12 பார்வைகள்

டெலிகிராம் செயலி மூலம் இணையவழி வணிகத்தில் பெருந்தொகை பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பட்டுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் நேற்று வெள்ளிக்கிழமை (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக மக்களை ஈர்த்து, இணையவழி தொழில் மூலம் பணம் ஈட்ட முடியும் எனக் கூறி இப் பண மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்களால் வைப்புச் செய்யப்பட்ட 542,877 ரூபாய் மொத்தத் தொகையில், 66,999 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவு இச் சோதனையை நடத்தி சந்தேகநபரை கைது செய்தனர்.

மேலும், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இச் சம்பவம் தொடர்பான மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பெண்ணொருவர் உ**யிரிழப்பு.!

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34)…

29 0 0
இலங்கை செய்திகள்

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ரிசாத் பதியுதீன்.!

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் இல்லத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

25 0 0
இலங்கை செய்திகள்

யாழில் கடலாமைகளுடன் ஒருவர் கைது.!

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றையதினம் சனிக்கிழமை இரண்டு கடலாமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேந்தான்குளம் பகுதியில் கடலாமைகளுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

32 0 0
இலங்கை செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் தில்லுமுல்லு.!

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் இருந்து பிரதேச சபையின் உறுப்பினர் தயாபரன் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது…

31 0 0