உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

வழக்குத் தீர்ப்பின் பிரதியை வழங்க இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
63 பார்வைகள்

வழக்குத் தீர்ப்பு ஒன்றின் பிரதியை வழங்குவதற்காக 500 ரூபாய் இலஞ்சப் பணத்தைக் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த பணத் தகராறு தொடர்பான வழக்கு ஒன்று சமரசமாக முடிவடைந்ததையடுத்து, அதன் தீர்ப்புப் பிரதியை வழங்குவதற்காகச் சந்தேகநபரான ஊழியர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி 500 ரூபாய் இலஞ்சப் பணத்தைக் கோரியுள்ளார்.

இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், நேற்று புதன்கிழமை (16) மாலை 3.35 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்துச் சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

25 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

40 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உ*யிரிழப்பு.!

கொழும்பு, தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொடை களு…

44 0 0
இலங்கை செய்திகள்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டி.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்றைய தினம் (17) கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,நாட்டின்…

44 0 0