உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டி.!

இலங்கை செய்திகள் 52 நிமிடங்கள் முன்
45 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்றைய தினம் (17) கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும் அல்லது சிறையில் அடைக்கப்பட்டாலும், தாய்நாட்டைப் பாதுகாக்கும் கட்சியின் வேலைத்திட்டங்கள் தடையின்றி தொடரும் எனக் குறிப்பிட்ட அவர், 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும், அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்துப் பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் நாட்டின் திறைசேரியை நிரப்புவதற்கு முதலீடுகளையோ அல்லது அபிவிருத்தித் திட்டங்களையோ பயன்படுத்தாமல், பொதுமக்கள் மீது அதிக வரிகளைச் சுமத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

நாய் வரி மற்றும் தாய்ப்பாலுக்கான வரி போன்ற வரலாற்றுக் கதைகளை மேற்கோள் காட்டி, அரசாங்கம் வரிகளை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு வேடிக்கையான ஆட்சியாக மாறியுள்ளதாக விமர்சித்தார்.

மேலும், பொலன்னறுவையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் விவசாய அமைச்சரும் அவரது பிரதி அமைச்சரும் கலந்துகொள்ளாததை சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற கொள்கைகள் காரணமாக சொந்த அமைச்சர்களே ஜனாதிபதியின் திட்டங்களைப் புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் அனுராதபுரக் கூட்டத்தில் அர்ஜுனா இராமநாதன் ஆற்றிய உரை குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் இனவாதத்தையோ அல்லது பிரிவினைவாதத்தையோ ஆதரித்துப் பேசவில்லை என்றும், இனிமேல் பிரிவினைவாதத்திற்கு இடம் கொடுக்கப்போவதில்லை என்ற கருத்தையே முன் உரையாடினார் என்றும் தெளிவுபடுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

26 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

40 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உ*யிரிழப்பு.!

கொழும்பு, தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொடை களு…

44 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்குளியில் மூவர் உ*யிரிழந்தமைக்கு காரணமான காரின் சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

கொழும்பு, மட்டக்குளி – பெர்குசன் வீதியில் 3 பேர் உயிரிழந்தமைக்குக் காரணமான வீதி விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

33 0 0