உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

மரங்களை நடுகை செய்து அதனை பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது.

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
44 பார்வைகள்

சூழல் சமநிலையை பேணுவதில் மரங்களின் பங்களிப்பு மகத்துவமானது. எனவே இயற்கை அனர்த்தங்களில் இருந்து எம்மை பாதுகாக்கும் வகையில் மரங்களை நடுகை செய்து அதனை பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்.க. கனகேஸ்வரன் தெரிவித்தார்.

‘ மன்னாரின் பசுமை மாபெரும் மரநடுகை விழா’ எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தின் சமூக சேவையாளர் லங்கேஸ்வரன் தனது தந்தையின் 18 ஆவது ஆண்டு நினைவாக மன்னார் மாவட்டம் முழுவதும் பயன் தரும் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் நடவடிக்கையை இன்றைய தினம் வியாழக்கிழமை (17) ஆரம்பித்தார்.

ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (17) வியாழக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது மரக்கன்றுகளை நட்டு வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
சூழல் சமநிலையை பேணுவதில் மரங்களின் பங்களிப்பு மகத்துவமானது. அது உங்கள் அனைவருக்கும் தெரியும். தற்போது கூட பல இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றிருப்பதை நாங்கள் அவதானிக்கலாம்.

நேபாளத்தில் பனிமலை உருகுவது, அதேபோன்று எல்நினோ போன்ற அசாதாரண நிலைமைகளுக்கெல்லாம் காரணம் சூழல் வெப்பநிலையில் ஏற்படுகின்ற அதிகரிப்பு. எனவே அந்த சூழல் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதில் மரங்களின் பங்களிப்பு மகத்துவமானது.

நாங்கள் சுவாசிக்கும் பொழுது வெளியிடுகின்ற காபன் ஈரொட்சைட்டை உள் வாங்குவதில் இந்த மரங்களுக்குரிய பங்களிப்பு மகத்துவமானது.

சூழலிலே காபன் ஈரொட்சைட் அதிகரிக்கும் பொழுது சூழல் வெப்பநிலையும் அதனோடு இணைந்த வகையில் அதிகரிக்கும். எனவே சூழல் சமநிலையை பேணுவதில் மரங்களின் பங்களிப்பு முக்கியமானது. அதைக் கருத்தில் எடுத்து, உண்மையில் தன்னுடைய தந்தையாரது 18 ஆவது நினைவாக இந்த முயற்சியை எடுத்திருப்பது மிகவும் பயனுள்ளது.

இந்த மரநடுகை முயற்சி சிறப்பான முறையில் இடம்பெற வேண்டும். தற்போது பொது இடங்கள், வைத்தியசாலை, பாடசாலைகள் போன்ற பொது இடங்களிலும், அதேபோன்று வீட்டுக்கு ஒரு மரமும் வழங்குவதற்கு, அவருடைய தந்தையார் சார்பாக இந்த முயற்சி எடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

எனவே இந்த முயற்சியிலே பங்கெடுத்த லங்கேஸ்வரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேவேளை இந்த பயன்தரு மரத்தைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளும் இந்த மரத்தை நல்ல முறையில் பராமரித்து அதன் பயனைப் பெற்றுச் செல்ல வேண்டும். மரம் மிகவும் உன்னதமானது.

எனவே தருகின்ற மரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி, அதற்குரிய பலனை நீங்கள் குறுகிய காலத்திலே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே அதனைப் பெற்று பயனடைய வேண்டும் .

மன்னார் பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அவர்களின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

26 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

40 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உ*யிரிழப்பு.!

கொழும்பு, தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொடை களு…

44 0 0
இலங்கை செய்திகள்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டி.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்றைய தினம் (17) கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,நாட்டின்…

44 0 0