உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

ஆண் ஒருவரின் ச*டலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 37 நிமிடங்கள் முன்
67 பார்வைகள்

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து 46 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தை சேர்ந்த சவரியார் பிரான்சிஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை சமன் பாடசாலைக்கு அருகாமையில் குறித்த நபருடைய கைப்பை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்று காலை முதல் மேல் கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதலின் பின்னர், நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெற்ற பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த நபர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா? என்பது தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை மற்றும் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை; இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் இலங்கை அரசின் செயற்பாடுகளை வரவேற்றுள்ளார் என்று ஒருசில ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட வகையில் செய்தி வெளியிட்டுள்ளன. உயர்ஸ்தானிகர்…

62 0 0
இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு.!

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று…

93 0 0
இலங்கை செய்திகள்

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணிக்கான துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு.!

தமிழினப் படுகொ*லைக்கு சர்வதேச நீதி கோரியும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் வருகின்ற 13ஆம் திகதி யாழ் நகரில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணிக்கான துண்டுப்பிரசுரம் வழங்கும்…

55 0 0
இலங்கை செய்திகள்

திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானை அட்டகாசம்.!

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று (09.09.2026) அதிகாலை வேளையில் காட்டுயானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.…

93 0 0