உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எதிர்க்கட்சித் தலைவருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
156 பார்வைகள்

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (09) கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் பன்முகத் தொடர்புகள் போலவே இரு தரப்பினரின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான, கலாச்சார மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான, பயனுள்ள மற்றும் தொடர்ச்சியான உறவைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

அத்துடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவ வேண்டிய அமைதி, பாதுகாப்பு, நிலையான தன்மை மற்றும் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய அபிவிருத்தி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாகவும் இரு தலைவர்களும் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கக்கூடிய உறவைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை மற்றும் இந்திய மக்களிடையே நிலவும் நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தினையும் இச்சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணியில் சர்வதேச தடயவியல் விசாரணை நடத்த வேண்டும் – கனேடிய அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடிய வெளிவிவகாரத் திணைக்கள…

76 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை பிரதான வீதியில் யானைகள் அட்டகாசம்!

அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ‘அக்ரம் பார்ம் ஹவுஸ்’ (Akram Farm House) முன்பாக உள்ள லங்கா சத்தோச நிறுவனத்தின் களஞ்சியசாலை மற்றும் அதனை…

71 0 0
இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழக பேச்சுப் போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் இரண்டாமிடம்.!

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையால் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜெரோம் ஜொய்சன் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்.…

105 0 0
இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் உப்பளத் திட்டத்தை கைவிடுங்கள்.!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் முன்மொழியப்பட்ட உப்பளத் திட்டத்தினை கைவிடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை கடிதம் அனுப்பிவைத்துள்ளார். இது…

90 0 0