உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானை அட்டகாசம்.!

இலங்கை செய்திகள் 58 நிமிடங்கள் முன்
89 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று (09.09.2026) அதிகாலை வேளையில் காட்டுயானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலையில் வீடொன்றை இலக்கு வைத்த காட்டுயானை, அதன் பாதுகாப்பு மதில் சுவரை உடைத்துக்கொண்டு வீட்டினுள் அத்துமீறி நுழைந்துள்ளது.

அக்காலப்பகுதியில் வீட்டில் ஆண்கள் எவரும் இல்லாத நிலையில், உள்ளே தனிமையில் இருந்த பெண்கள் யானையைக் கண்டு பீதியடைந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தவாறு அங்கிருந்து ஓடித் தப்பியுள்ளனர்.

பெண்களைத் துரத்திவிட்டு வீட்டினுள் புகுந்த காட்டுயானை, அங்குப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட நெல் மூடைகளைக் கிழித்து உண்டு துவசம் செய்துள்ளது.

போரதீவுப்பற்று பகுதியில் அண்மைக்காலமாகவே காட்டுயானைகளின் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டும் கிராம மக்கள், இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈட்டினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு.!

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று…

90 0 0
இலங்கை செய்திகள்

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணிக்கான துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு.!

தமிழினப் படுகொ*லைக்கு சர்வதேச நீதி கோரியும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் வருகின்ற 13ஆம் திகதி யாழ் நகரில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணிக்கான துண்டுப்பிரசுரம் வழங்கும்…

51 0 0
இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை…

110 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய…

120 0 0